Skip to main content

நூலக மற்றும் தகவல் விஞ்ஞான உயர் டிப்ளோமா – 2023/2024
Higher Diploma in Library and Information Sciences – 2023/2024 (SLQF 4)

கிழக்குப் பல்கலைக் கழக வெளிவாரிப்பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் நிலையமானது நூலகம் மற்றும் தகவல் விஞ்ஞான உயர் டிப்ளோமா கற்கையினை வழங்கவிருக்கின்றது. நூலகம் மற்றும் தகவல் விஞ்ஞானத் துறையில் நிகழ்காலத் தேவைக்கேற்ப சிறப்புடன் செயற்படுவதற்கான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதற்காக இக்கற்கை தயார்படுத்தப்பட்டுள்ளது. பகுதிநேரக் கற்கையாக மூன்று வருட காலத்தில் இக்கற்கையினைப் பூர்த்தி செய்யலாம். இக்கற்கையானது இலங்கையின் கல்வித் தரக் கட்டமைப்பின் நான்காம் நிலையிலுள்ளது (SLQF 4). இவ் உயர் டிப்ளோமா கற்கைநெறியின் 2023/2024 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன.

தகைமைகள்

  • ஏதேனும் ஒரு துறையில் க.பொ.த உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும். இச்சித்தியானது இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் பெற்றிருக்க வேண்டும்.

பாடநெறிக் காலம்

03 வருடங்கள் (வார இறுதி நாட்கள்)

மொழி மூலம்

தமிழ்

கற்பித்தல் முறை

நேரடி மற்றும் நிகழ்நிலை மூலம் நடைபெறும்

விண்ணப்ப கட்டணம்

ரூபா. 1000/=

கற்கை நெறிக்கான கட்டணம்

ரூபா. 54,000/=

(இரண்டு தவணைகளில் செலுத்தலாம்)

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரிகள் கீழுள்ள 'Apply Online' எனும் இணைப்பிலுள்ள நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதனுடன் தொடர்புடைய ஆவணங்களையும், நிதியாளருக்கு விலாசமிடப்பட்டு (Bursar, Eastern University) மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் ரூபா 1000/= பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் பல்கலைக்கழக பிரதியையும் Scan செய்து மேற்கூறிய வலைத்தளத்தில் தரவேற்றம் செய்ய வேண்டும்.

பணம் வைப்பிலிடவேண்டிய கணக்கிலக்கம் 227-1-001-9-0000-390 மக்கள் வங்கி, செங்கலடி கிளை.

அத்துடன் விண்ணப்பதாரிகள், விண்ணப்பித்த பின்னர் கிடைக்கப்பெறும் படிவத்தினையும், இதனுடன் தொடர்பான ஆவணங்களின் நிழல் பிரதியுடன், பணம் வைப்பிலிட்ட பற்றுச் சீட்டின் பல்கலைக்கழக பிரதியினையும் இணைத்து சுயவிலாசம் இடப்பட்ட ரூபா 50/= பெறுமதி உள்ள முத்திரை ஒட்டப்பட்டதுமான கடித உறை ஒன்றையும்

உதவிப்பதிவாளர்,
வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்,
கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை,
இல. 50, புதிய வீதி, மட்டக்களப்பு.

எனும் விலாசத்திற்கு 02.08.2023 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும். மேலும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “நூலக மற்றும் தகவல் விஞ்ஞான உயர் டிப்ளோமா – 2023/2024” என்பதை குறிப்பிடுதல் வேண்டும்

விண்ணப்ப முடிவுத்திகதி

-- Closed --

மேலதிக தகவலுக்கு

தொலைபேசி இல

: 0652227025

மின் அஞ்சல் 

: cedecinfo@esn.ac.lk

இணையத்தளம்

: www.cedec.esn.ac.lk

© CEDEC, EUSL. All rights reserved.