சாதரணமாக நான்கு தடவைகள் தோற்ற முடியும். ஆனால் மேலதிக தடவை தோற்ற வேண்டுமாக இருந்தால் மூதவையின்(Senate) அனுமதியினைப்பெறவேண்டும். அதற்கு குறித்தமாணவர் எழுத்து மூலமான கோரிக்கையினை CEDEC ற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
ஆம். ஆனால் மருத்துவ காரணங்களினால் தோற்ற முடியாதவிடத்து மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது மூன்று தடவைகளுக்குள் கணிப்பிடப்பட மாட்டாது.
தவறவிட்ட பாடப் பரீட்சை திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்பட் மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்தல் வேண்டும். அச்சான்றிதழ் பல்கலைக்கழக மருத்துவரினால் உறுதிப்படுத்தப்படவேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட மாணவர் சாதாரண பரீட்சாத்தியாக கருத்திலெடுக்கப்படுவார்.
பெற்றோர், உடன்பிறந்த சகோர சகோதரி, மனைவி/கணவன்;, பிள்ளைகள் ஆகியோரின் இறப்பு நேர்ந்தால் உரிய அத்தாட்சிகளுடன் விண்ணப்பிக்க முடியும்.
ஒவ்வொரு ஆண்டிலும் பாடங்களில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளில்; ஒரு மாணவர் ஒரு C- வைத்திருக்கும் பட்சத்தில் (மொத்தமாக 3C- கள்) அது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்வதற்குரிய தகுதியினுள் உள்ளடக்கப்படும்.
குறிப்பிட்ட பாடத்தில் நடாத்தப்பட்ட மதீப்பீடுகளில் தோற்றி 40% ற்கு கணிப்பிடப்பட்ட புள்ளிகளில் ஆகக் குறைந்தது 10 புள்ளிகள் பெற்றிருத்தல் வேண்டும்.
ஆம். குறிப்பிட்ட வருட பாடங்கள் நிறைவடைந்த பின் அடுத்த வருடத்திற்கான பதிவினை மேற்கொள்வதற்கு பாடங்கள் நிறைவந்த வருடத்திற்குரிய அரையாண்டு இறுதிப்;பரீட்சைகளில் மொத்தமாக 50% பாடங்களுக்கு குறித்த மாணவர் தோற்றியிருக்கவேண்டும்.
ஆம். பரீட்சை விதிகளை மீறும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தண்டனைக் கோவையின் பிரகாரம் தண்டனைகள் வழங்கப்படும்
இல்லை. பல்கலைக்கழகத்தின் பீடத்தினாலும் பேரவையினாலும் பரிந்துரைக்கப்பட்டு மூதவையினால் இறுதிப்படுத்தப்பட்ட தண்டனைகள் மீளப்பொறப்படமாட்டாது